யாழ்.உடுவில் - அம்பலவாணர் வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தின் பின்னணியில் கூலிப்படை..! சுவிஸ் நாட்டிலிருந்து 3 லட்சம் வழங்கப்பட்டதாம்..
யாழ்.உடுவில் - அம்பலவாணர் வீதியில் கடந்த 19ம் திகதி இடம்பெற்ற பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 19 திகதி இடம்பெற்ற தாக்குதலில் 4 லட்சம் பெறுமதியான சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுத்தப்பட்டிருந்தன, காணிப்பிரச்சனை ஒன்றில் அயல்வீட்டுகாரருடன் ஏற்பட்ட மோதல் சம்பவமே இந்த தாக்குதல் இடம்பெற்றமைக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்தது.
மானிப்பாயை சேர்ந்த சுவிஸ்லாந்தில் வசிக்கும் நபர் ஒருவர் கூலிப்படைக்கு 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து வீட்டிற்கு பெற்றோல் குண்டு அடித்து வீட்டையும் அடித்து நொருக்குமாறு சொல்லியுள்ளார். அதன் காரணமாக மானிப்பாயை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு பணம் தந்து அவர் தன்னுடன் உள்ள இளைஞர்களை கூட்டி சென்று
சம்பவத்தை செய்ததாகவும் விசாரனையில் தெரியவந்தது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் உள்ளனர் அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையினை யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் சுன்னாகப் பொலிஸாரும் மேற்கொண்டு வருகிறார்கள்.
கைது செய்யபட்டவர்களை மேலதிக விசாரனையின் பின்னர் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.