இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பெருமளவு வெடிபொருட்கள் மீட்ப! ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பெருமளவு வெடிபொருட்கள் மீட்ப! ஒருவர் கைது..

மன்னாரில் சட்டவிரோத மீன் பிடிக்குப் பயன்படுத்தப்படும் ஒரு தொகை வெடிமருந்துகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த வெடி மருந்துகள் மீன்பிடிக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 900 கிலோ எடையுடைய  வெடி மருந்துகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மன்னார் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நிலையில் 

பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio