யாழ்.சாவகச்சோி, கொடிகாமம் பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் தள்ளுபடி!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி, கொடிகாமம் பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் தள்ளுபடி!

மாவீரர் நாள் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்ககோரி சாவகச்சோி மற்றும் கொடிகாமம் பொலிஸாரினால் சாவகச்சோி நீதிவான் நீதிமன்றில் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

சாவகச்சேரி பொலிஸாரினால் 13 பேருக்கு எதிராகவும், கொடிகாமம் பொலிஸாரால் நான்கு பேருக்கு எதிராகவும் தடையுத்தரவு பிறப்பிக்க கோரி இந்த விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருந்தது. 

இந்த விண்ணப்பங்களை இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட சாவகச்சோி நீதிவான் நிதிமன்ற நீதிவான் பொலிஸாரின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்களில் 

பெரும்பாலானவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். நாட்டின் சட்டம் இயற்றும் சபையில் இருந்த, இருக்கின்றவர்களுக்கு நாட்டின் சட்டம் தெளிவாக தொிந்திருக்கும். 

எனவே அவர்கள் மீது சட்டத்தை மீறுவார்கள் என்ற அடிப்படையில் பொலிஸார் செய்த விண்ணப்பத்தின் அடிப்படையில் தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது. ஆனால் பெயர் குறிப்பிட்ட நபர்களும் ஏனையவர்களும் 

இலங்கையின் சட்டங்களை மீறி ஏதாவது நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது. 

அதனால் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்று குறித்த நபர்களுக்கு எதிராக தடை உத்தரவை வழங்க முடியாது என்று தெரிவித்து பொலிஸாரின் விண்ணப்பத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். 

குறித்த வழக்கில் பெயர் குறிப்பிட்டவர்கள் சார்பாக சட்டத்தரணி மணிவண்ணன் சட்டத்தரணி சதீஸ்வரன் சட்டத்தரணி குகனேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு