வடமாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு வடமாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு வடமாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு!

வடமாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் தாம் எதிர்நோக்கும் நிர்வாகரீதியான பிரச்சினைகள் தொடர்பாக தமக்கு முறைப்பாடுகளை வழங்குமாறு கூறியுள்ள வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, தனது வட்ஸ்அப் இலக்கத்தையும் வழங்கியிருக்கின்றார். 

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற உள்ள சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளதுடன், வட்ஸஅப் இலக்கத்தை வழங்கினார். 

குறித்த நிகழ்வில் பங்குபற்றிய முதலீட்டாளர்கள் தமது குறைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வடக்கில் உள்ள அரச அதிகாரிகளின் செயற்பாடுகள்போதாது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். 

தமது உற்பத்தி துறைகள் தொடர்பில் சட்டரீதியான ஆவணங்கள் மற்றும் தொழில் விரிவுபடுத்துதல்களை மேற்கள்வதற்கு கீழ்மட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் தமக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக மன்னார் மாவட்டத்தில் இருந்து கலந்துகொண்ட முதலீட்டாளர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அதுமட்டுமல்லாது யாழ்ப்பாண வணிகர் சங்கமும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் எடுத்து கூறியதுடன் வடக்கிலுள்ள வளங்களை பயன்படுத்துவதற்கு இங்குள்ள முதலீட்டாளர்கள் தயாராக இருக்கின்ற நிலையில் அதனை பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது பதிலளித்த வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தங்களின் கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அது தொடர்பில் தனது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை வழங்க முடியும் என கூறி இலக்கத்தை வழங்கினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு