பொருத்தமற்ற அபிவிருத்தி திட்டங்களினால் யாழ்.மாவட்டம் தொடர்ந்தும் பின்னடைவு! பிரதம செயலாளர் சமன் பந்துலசேன..

ஆசிரியர் - Editor I
பொருத்தமற்ற அபிவிருத்தி திட்டங்களினால் யாழ்.மாவட்டம் தொடர்ந்தும் பின்னடைவு! பிரதம செயலாளர் சமன் பந்துலசேன..

ஒருபுறம் பெருவீதி அபிவிருத்தி மறுபுறம் பொருத்தமற்ற உட்கட்டுமானங்கள் என பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்று வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தொிவித்திருக்கின்றார். 

யாழ்.மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை வடமாகாண நகர அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்துள்ளது. 

இது தொடர்பான விசேட கூட்டம் யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டிருந்த சமன் பந்துல சேன மேலும் கூறுகையில், 

மாவட்ட அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்படவேண்டும். ஆனால் அந்த திட்டங்களை உரிய காலங்களில் பொருத்தமான தொழில் நுணுக்க முறைகளில் செயற்படுதி வெற்றிகாணவேண்டும். 

ஆனால் யூ.என்.டி.பி நிறுவனம் யாழ்.மாவட்டச் செயலகத்துடன் இணைந்த வகையில் 2018ம் ஆண்டில் யாழ்.மாவட்டத்தில் பேண்தகு அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக 4 பிரதான பிரிவுகளில் திட்டங்களை பெரும் செலவில் முன்னெடுத்தது. 

ஆனால் இதுவரை எந்த அபிவிருத்தியும் எய்தப்படாத நிலையை நான் உணருகின்றேன். எனவே தயாரிக்கப்படும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களை சென்றடையவேண்டும். 

அந்த இலக்கை எட்டுவதற்காக ஒருங்கிணைந்த அடிப்படையில் இளைஞர்களின் மனங்களை வென்று மாவட்டத்திற்கான திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு