ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகளை தடை செய்ய கோரி தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிப்பு

ஆசிரியர் - Admin
ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகளை தடை செய்ய கோரி தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிப்பு

மன்னாரில், நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை தடை செய்ய கோரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இணைந்து தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில்,நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை, ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை தடை செய்யுமாறும், திருப்பலிகள் மற்றும் பூஜை வழிபாடுகளில், விடுதலைப் புலிகளின், இறந்த மாவீரர்களின் நினைவேந்தல்கள் இடம்பெற உள்ளதாகவும் கூறி, மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளடங்களாக, மன்னாரில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இணைந்து, இன்று, மன்னார் நீதிமன்றத்தில் விசேட விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்த நிலையில், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

Radio