SuperTopAds

இளஞ்செழியன் வீட்டிற்கு சென்ற காவல் துறைக்கு ஏற்பட்ட குழப்பம்

ஆசிரியர் - Admin
இளஞ்செழியன் வீட்டிற்கு சென்ற காவல் துறைக்கு ஏற்பட்ட குழப்பம்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியனின் வீட்டிற்கு நீதிமன்ற  கட்டளையை வழங்குவதற்காக கொண்டு சென்ற காவல் துறையால் திருப்பி அனுப்பிய சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு காவல் துறை  பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தடை செய்யக்கோரி, முல்லைத்தீவு காவல் துறையால்  நேற்று முன்தினம்  மாங்குளம் நீதிமன்றில் AR/868/21 என்னும் வழக்கிலக்கத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அதற்மைய வழக்கினை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, முல்லைத்தீவு காவல் துறை  பிரிவிற்குட்பட்ட பகுதியில் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான பீற்றர் இழஞ்செழியன் உள்ளிட்ட பன்னிரெண்டு பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இவ்வாறு நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட தடைக்கட்டளையினை  இன்று முல்லைத்தீவு காவல் துறை  தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான பீற்றர் இழஞ்செழியன் இல்லத்திற்குச் சென்று கையளித்திருந்தனர்.

இதன்போது நீதிமன்ற கட்டளையில் உள்ள பெயரில் தனது தந்தையாரின் பெயர் தவறாக உள்ளதாகவும் இந்த உத்தரவு எனக்கு பொருந்தாது எனவும் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த பொலிஸ் பொறுப்பதிகாரி அதிகாரியை நீதிமன்றுக்கு சென்று தெரியப்படுத்துமாறும் காவல் துறை  வாக்குவாதப்பட்ட   பீற்றர் இழஞ்செழியன் தடையுத்தரவை பெறாது காவல் துறையால் திருப்பி அனுப்பியுள்ளார்.