நினைவுகூரலைத் தடுத்தால் மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள்!

ஆசிரியர் - Admin
நினைவுகூரலைத் தடுத்தால் மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள்!

போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை நினைவு கூறும் நிகழ்வுகளை அரசாங்கம் தொடர்ந்தும் தடுத்தி நிறுத்தினால் எமது மக்கள் மேலும் வீறு கொண்டு எழுவார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இந்த மாதம் கார்த்திகை மாதம் என்பதனால் நீதிமன்ற தடை உத்தரவுகளை வீடு வீடாக சென்று ஒவ்வொருவருக்கும் போலீசார் கொடுத்து வருகின்றனர்.  எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.  போர் மௌனித்துவிட்டது,போரில் தனது இனம், மண்ணுக்காக மரணித்தவர்களை நினைவு கூருவதற்கான வாய்ப்புகளை இன்று அரசாங்கம் தடுக்கின்றது.

 இவ்வாறு தடுப்பதன் மூலம் எதனை நீங்கள் சாதிக்கபோகின்றீர்கள்?  என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு