யாழ்.நகரில் உள்ள பிரபல உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு தும்பு மற்றும் வண்டு! யாழ்.மாநகர சுகாதாரத்துறை உறக்கம்..
யாழ்.நகரில் உள்ள பிரபல உணவு விடுதியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் சாப்பாட்டில் வண்டு மற்றும் இரும்பு தும்பு ஆகிய காணப்பட்ட நிலையில் அது குறித்து உணவு விடுதியில் பணியாற்றியோர் கவனத்திற்கு விடயத்தை கொண்டு சென்றபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என கூறப்படுகின்றது.
பாத்திரம் கழுவ பயன்படும் இரும்பு தும்பின் துண்டு ஒன்றும், வண்டு ஒன்றும் காணப்பட்டுள்ளது. இது குறித்து அங்கு பணியாற்றியவர்களிடம் விடயத்தை கூறியபோது அவர்கள் உடனடியாகவே உணவு தட்டை துாக்கி சென்றிருக்கின்றனர். எனினும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பின்னர் பணம் செலுத்தும் இடத்திலும் இது குறித்து சுட்டிக்காட்டிய நிலையில் முகாமையாளருக்கு கூறி நடவடிக்கை எடுப்போம். என கூறியவர்கள் அந்த இடத்திலிருந்து நகரவே இல்லை. எனவும், முகாமையாளருடன் தொலைபேசியில் பேசவில்லை. எனவும் கூறியுள்ள வாடிக்கையாளர்.
அவர்கள் எதுவும் நடக்காததுபோல் இயல்பாக நடந்து கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை யாழ்.நகரில் சாதாரண உணவகங்கள், தெருக்கடைகளுக்கு சென்று சட்டத்தை காப்பாற்றும் சுகாதா பிரிவினர் பணம் படைத்தவர்களின் உணவகங்களில் சட்டத்தை காப்பாற்றுவதே இல்லை.
அங்கெல்லாம் அவர்கள் கை நனைத்ததால் சட்டத்தை காப்பாற்ற முடியவில்லையா? யாழ்.மாநகர சுகாதார துறையினர் பாதுகாப்பான உணவு மக்களுக்கு வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்யும் பொறுப்பற்றவர்களா? எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.