தேசிய மற்றும் மாகாண திணைக்களங்கள் பல கோடிரூபாய் தரவேண்டும்! தர மறுத்தால் வீதியில் இறங்கி போராடுவோம், நிர்மாணிகள் சங்கம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
தேசிய மற்றும் மாகாண திணைக்களங்கள் பல கோடிரூபாய் தரவேண்டும்! தர மறுத்தால் வீதியில் இறங்கி போராடுவோம், நிர்மாணிகள் சங்கம் எச்சரிக்கை..

தேசிய மற்றும் மாகாண திணைக்களங்களால் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான வேலைகளுக்கான பல கோடி ரூபாய் நிதி இதுவரையில் ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்படவில்லை. என தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடமாகாண கிளையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது, 

5 மில்லியனுக்கும் 3 மாத ஒப்பந்த காலத்திற்கு மேற்பட்ட வேலைகளுக்கு விலையேற்றத்திற்கான சூத்திரம் பாவிப்பதற்கு நிபந்தனை செயல்படுத்த முடியாதவாறு நிபந்தனைகள் மாற்றியமைத்து பல ஒப்பந்தங்கள் கோரப்படுகின்றது. 

மேலும் அந்த நிபந்தனைகள் உள்ள ஒப்பந்தத்திலும் கூட சில பொருட்களின் விலையேற்றத்ததை அச் சூத்திரம் மூலம் பெறமுடியாமல் உள்ளது. தாமதக் கொடுப்பனவு ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு ஒப்பந்தகாரருக்கு முற்பணமானது 14 நாட்களிலும், இடைக் கொடுப்பனவு 35 நாட்களிலும் கொடுக்கப்படவேண்டும். 

ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கொடுப்பனவு கொடுக்கப்படுவதில்லை. அந்த தாமதத்திற்கான வட்டியும் கொடுக்கப்படுவதில்லை. இதில் முக்கியமானது அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டமானது (2016 ஆண்டு தொடக்கம் 2020 ஆண்டு ) செய்யப்பட்ட வேலைக்கு கொடுப்பனவு பல ஒப்பந்தகாரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. 

இத்திட்டமானது மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் கட்டிடத் திணைக்களம் மேலும் திட்ட முகாமைத்துவ அலுவலகம் ஊடாகவும் வேலைகள் செய்து 2018 ஆண்டு தொடக்கம் கொடுப்பனவு எடுக்காத ஒப்பந்தகாரர்களும் உள்ளார்கள். 

அதன் பெறுமதி 16.50 கோடி ரூபா ஆகும் அதில் மேலும் வழங்கப்பட்ட வேலைகளை முடிவுறுத்துவதற்கு 62 கோடி ரூபா தேவையாக உள்ளது. அதே போன்று கிராம உட்கட்டுமான அபிவிருத்தி திட்டம் ( 2019) மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு வேலைகள் முடிவுறுத்தப்பட்டு சரியாக, இரண்டு வருடம் கடந்தும் 80வீதக் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை. 

அதன் பெறுமதி 12 கோடி ரூபா ஆகும். மேலும் மத்திய அரசால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் உள்ளது. 

மேலும் மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதி வேலைக்கான கொடுப்பனவு அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படாது உள்ளது. தற்போதைய அரசாங்கம் அந்த திட்டத்தை நிறுத்தி உள்ளமையால் பல வேலைகள் முடிவுறுத்தப் படாமலும் உள்ளது. 

முடிவுறுத்தப்பட்ட வேலையிலும் கொடுப்பனவு கொடுக்கப்படவில்லை. எமது அங்கத்தவர்கள் பலர் தொழிலை தொடர்ந்து நடாத்த முடியாமலும் வங்கிகளில் இருந்து எடுத்த கடன்களை கட்ட முடியாமலும் உள்ளார்கள்.

எனவே இது தொடர்பாக நாம் ஆளுனர் மற்றும் உயர் அதிகாரிகளுடனும் கதைப்பதற்கு நேரம் கேட்டு 2019 ஆண்டு ஜுலை மாதத்திற்கு பின்னர் தொடக்கம் இன்றுவரை வரை பல கடிதங்கள், தொலைபேசி தொடர்புகள் கொண்டும் எம்மை அவர்கள் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கூட தரவில்லை. 

ஆகவே எமக்கான தீர்வு கிடைக்காவிட்டால் நாங்கள் வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு