ஒட்டுசுட்டான் இந்துக் கோவில்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம்

ஆசிரியர் - Admin
ஒட்டுசுட்டான் இந்துக் கோவில்களின் ஒன்றியம் அங்குரார்ப்பணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பதிவுசெய்யப்பட்ட 74 இந்துக் கோவில்களின் நிர்வாக சபை உறுப்பினர்களைக் கொண்டு, ஒட்டுசுட்டான்  பிரதேச  இந்துக் கோவில்களின் ஒன்றியம், இன்று (18) அங்குரார்ப்பணம்  செய்துவைக்கப்பட்டது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன் தலைமையில்,  ஒட்டுசுட்டான்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த அங்குரார்ப்பண கூட்டம் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில்  ஒட்டுசுட்டான்  பிரதேச கலாசார உத்தியோகத்தர் சி.மோகனராசா  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இந்துக் கோவில்கள் இடர்கால உதவிகளை புரிதல், அறநெறி கல்வியை ஊக்குவித்தல், கோவில்களை பிணக்குகள் இன்றி ஒற்றுமையாக கொண்டு செல்லல், மத மாற்றத்தைக் கட்டுப்படுத்தல், சமூக ஏற்றத்தாழ்வு பாராது வழிபட வழி வகுத்தல் என்பன குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டன.

அத்துடன், அநாவசிய ஆடம்பர செலவுகளைக் குறைத்து, அதை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுதல், உள்ளூர் கலைஞர்களை ஊக்குவித்தல், வெளிப்படை தன்மையுடன் கணக்கு நடவடிக்கைகளை கையாலால் உள்ளிடட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு