யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள எச்சரிக்கை..! மீண்டும் கொரோனா அபாயம் அதிகரிக்கிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள எச்சரிக்கை..! மீண்டும் கொரோனா அபாயம் அதிகரிக்கிறது..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் அதிகரித்துச் செல்வதாக மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

யாழ் மாவட்டத்தின் சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

யாழ்.மாவட்டத்தில் இற்றுவரை 469 மரணம் பதிவாகியுள்ளது தற்பேதைய சுழலில் 634 குடும்பங்கள் கொரோனா தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா அதிகரித்து செல்கிறது. பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கவேண்டும்.

சமுக இடைவெளி முகக்கவசம் அணிதல் போன்றவை கட்டாயம் பின்பற்றப்படவேண்டும்தற்போதைய சுழலில் தளர்வு நிலை அறிவிக்கப்பட்டுள்ளபோதும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதனை கட்டாயம் பின்பற்றபடவேண்டும் .அவ்வாறு செய்வதன்மூலமே யாழ்ப்பாணத்தில் கொரோனாவை முற்றுமுழுதாக கட்டுப்படுத்தலாம். 

முகக்கவசம் இடைவெளி போன்றவிடயங்களில் கட்டாயம் பின்பற்ரப்படவேண்டும். இது மட்டுமன்றி பயணங்கள் இதர செயற்பாடுகளின்போது ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும்.

எவ்வளது துரம் ஒவ்வோருவரும் கட்டுப்பாட்டுடன் இருப்போமோ அத்தகைய அளவிற்கு நாமும் எமது சமுதாயத்தை பாதுகாத்து கொள்ளலாம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு