குரூரமான வெட்டுக் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு!
கிளிநொச்சி - பரந்தன் சிவபுரம் பகுதியில் குரூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.
முத்தையா கேதீஸ்வரன் (வயது27) என்பவரே வெட்டு காயங்களுடன் தற்காலிக கொட்டகை ஒன்றலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவருடைய சடலத்தில் சரமாரியான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக அயலவர்கள் தொிவித்திருக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.