யாழ்.மாவட்டத்தில் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி கறுப்பு சந்தையை வளர்க்காதீர்கள்! எரிபொருள் தேவையான அளவில் உள்ளது, யாழ்.மாவட்டச் செயலர் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி கறுப்பு சந்தையை வளர்க்காதீர்கள்! எரிபொருள் தேவையான அளவில் உள்ளது, யாழ்.மாவட்டச் செயலர் கோரிக்கை..

யாழ்.மாவட்டத்தில் வதந்தியால் மக்கள் செயற்கை எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாகும் அபாயம் எழுந்துள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் தேவையான அளவில் உள்ளது. கொழும்பிலும் அவ்வாறே தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. 

மேலும் விநியோக நடவடிக்கைகளிலும் எந்தவொரு தடையும் இல்லை. இவ்வாறான நிலையில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. 

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் வடமாகாண முகாமையாளருடன் தொடர்புகொண்டு விடயத்தை கேட்டறிந்தோம். இதன்போது காங்கேசன்துறை களஞ்சியத்தில் 26 லட்சம் லீற்றர் டீசல் 

மற்றும் 155000 லீற்றர் 92 ஒக்ரைன் பெற்றோல், 165000 லீற்றர் மண்ணெண்யை கையிருப்பில் உள்ளது. 66,000 லீற்றர் 92 ஒக்ரைன் பெற்றோல் யாழ்.மாவட்டத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

பெற்றோல் விநியோகத்தை தங்குதடையின்றி மேற்கொள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆகவே பொதுமக்கள் முண்டியடித்து தட்டுப்பாடு வருவதாகக் கருதி அதிகமாக கொள்வனவு செய்ய தேவையில்லை. 

தேவையான அளவை மாத்திரம் கொள்வனவு செய்யுங்கள். அதிகளவு கொள்வனவு காரணமாக சில பெற்றோல் நிலையங்களில் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

வதந்தியால் ஏற்பட்ட நிலைமை என்றே இதனை நாங்கள் கருதுகின்றோம். ஆகவே யாழ்.மாவட்ட மக்கள் தயவுசெய்து கொள்வனவை அதிகரித்த அளவில் செய்ய வேண்டாம். 

இதனால் கறுப்பு சந்தையிலே விலைகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் நமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவ்வாறு செய்ய வேண்டாமென வினயமாக கேட்டுக் கொள்கின்றோம். 

பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அதிகாரசபைக்கு உத்தியோகத்தர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறான காரியங்கள் தொடருமாக இருந்தால் பங்கீட்டு அடிப்படையில் விநியோகம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படலாம். 

அரசாங்கமும் தட்டுப்பாடு ஏற்படாது என கூறி வருகின்றது பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு