A-9 வீதியில் நடைமுறைக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு! சாரதிகளுக்கு வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு..
A-9 வீதியின் இரு பக்கங்களிலும் பகல் மற்றும் இரவில் வாகனங்கள் நிறுத்துவது குறித்து வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பலிஹக்கார விசேட உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் வவுனியா மாவட்டங்களில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து வாகனங்கள் நிறுத்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி வாகனங்களை நிறுத்த பொருத்தமான இடத்தை அடையாளப்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொதுவான அறிவிப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
அனுமதியற்ற வாகன நிறுத்தங்களுக்கு அனுமதி மறுக்கப்படவுள்ளது. வாகனம் திருத்தம் உள்ளிட்ட அவசர தேவை கருதி நிறுத்தப்பட்டால் மற்றய ஓட்டுனர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் எச்சரிக்கை பதாகை வைக்கப்படவேண்டும்.
இந்த திட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கான பணிப்பு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் 01.01.2021 முதல் 31/10/2021 வரையான காலப்பகுதியில் 128 மரண வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.134 பேர் உயிரிழந்துள்ளனர், 23 பேர் பலத்த காயங்கள் மற்றும் 308 சிறிய காயங்கள்.
வாகனம் ஓட்டும் முன் பொதுமக்கள் கவனமாக இருக்கவும், எப்போதும் சீட் பெல்ட் அணியவும், பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கவும், சரியான பாதை வேக வரம்புகளை உறுதி செய்யவும்,
சாலை விபத்துகளை குறைக்கவும், வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார, அனைத்து சாரதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடமாகாணம் மற்றும் இலங்கையில் தங்களுடைய குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு குறித்து எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும். என கேட்டிருக்கின்றார்.