SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் நீரிழிவு நோய்க்குள்ளாகும் இளையோர்! நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் பொறுப்பதிகாரி ம.அரவிந்தன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நீரிழிவு நோய்க்குள்ளாகும் இளையோர்! நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் பொறுப்பதிகாரி ம.அரவிந்தன்..

யாழ்.மாவட்டத்தில் நீரிழிவு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் பொறுப்பதிகாரி ம.அரவிந்தன் கூறியுள்ளார். 

நேற்றய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில்நீரிழிவு சிகிச்சை முகாமை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 

யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது நீரிழிவு நோய் என்பது பெரும்  அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக இளவயதினருக்கு இந்த நீரிழிவு நோயானது அதிகமாக காணப்படுகின்றது. 

இந்த நோய்த் தாக்கத்தினால் எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது. குறிப்பாக இந்த நீரிழிவு நோய் தொற்றுக்கு உள்ளாகுவோருக்கு ஏனைய பல தொற்றுநோய்களும் ஏற்படும். 

குறிப்பாக பாரிசவாதம் மற்றும் ஏனைய பல தொற்று நோய்கள் ஏற்படகூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. எனவே இளவயதினர் குறித்த நீரிழிவு நோய் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அல்லது  தகுந்த வேளைகளில் நீரிழிவு பரிசோதனையை மேற்கொண்டு ஆரம்பத்தில் இந்த நீரிழிவு நோயினை இனங்காணும் பட்சத்தில் அந்த நோயை குணமாக்க முடியும். 

அல்லது நோய் தொற்று காணப்பட்டால் அதனை முறையாக பின்பற்றி குணப்படுத்த முடியும் எனவே யாழ்.மாவட்டத்தில் நீரிழிவுநோய் தொடர்பில் பொதுமக்கள் சற்று அவதானமாக செயற்பட வேண்டும் என அவர தெரிவித்தார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்.நீரிழிவு கழகம் யாழ்.போதனா வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவு சிகிச்சை முகாம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெறும் நீரிழிவு சிகிச்சை முகாமினை பணிப்பாளர் த சத்தியமூர்த்தி மற்றும் மற்றும் நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் ஆகியோர் திறந்துவைத்தனர். 

அவர்களோடு யாழ்.நீரிழிவு கழகத்தின் தலைவர் தி. மைக்கல், செயலாளர் க. கணபதி மற்றும் நீரிழிவு கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குறித்த நீரிழிவு சிகிச்சை முகாமில் பொதுமக்கள் நீரிழிவு பரிசோதனையினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது