வடமாகாண கல்வி அமைச்சினால் ஆசிரியர் சேவையிலிருந்து நீக்கப்பட்ட ஆசிரியை..! மீள நியமனம் வழங்கிய ஆளுநர்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண கல்வி அமைச்சினால் ஆசிரியர் சேவையிலிருந்து நீக்கப்பட்ட ஆசிரியை..! மீள நியமனம் வழங்கிய ஆளுநர்..

ஓய்வூதியம் பெறுவதற்கு தேவையான சேவைக் காலத்தில் தான் தொண்டராகப் பணியாற்றிய காலத்தையும் இணைக்கும்படி கேட்டு போராட்டங்கள் நடத்திய நிலையில் பல்வேறு காரணங்களை முன்வைத்து ஆசிரியர் சேவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆளுநர் மீளவும் நியமனம் வழங்கியுள்ளார். 

கலியாணி என்ற ஆசிரியை ஒருவர் தனது ஓய்வூதியத்திற்கு தேவைப்படும் சேவைக் காலத்தில் தான் தொண்டர் ஆசிரியராக பணியாற்றிய காலத்தையும் சேர்க்கவேண்டும். எனக்கோரி போராட்டம் நடத்திவந்த நிலையில் பல காரணங்கள் கூறப்பட்டு ஆசிரியர் சேவையிலிருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில் தனது நியமனம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துவந்ததுடன், அதற்காக போராட்டங்களையும் நடந்திவந்தார். எனினும் எந்தவொரு நியாயமும் கிடைக்கவில்லை. 

தற்போது வடமாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநரை நோில் சந்தித்து தனது நியாயத்தை கூறியுள்ளார். இந்நிலையில் அவருடைய கோரிக்கையில் உள்ள நியாகம் மற்றும் மனிதாபிமானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆசிரியசேவையை மீள வழங்குமாறு ஆளுநர் பணித்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு