யாழ்.மாவட்டம் உட்பட வடக்கில் வாள்வெட்டு குழுக்களை கட்டுப்படுத்த 2 யோசனைகளை முன்வைத்த ஆளுநர்! நடவடிக்கை தயார் என்கிறார்..
யாழ்.மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் தலைதுாக்கியுள்ள வாள்வெட்டுக் குழுக்களை இல்லாமல் செய்வதற்கு பொருத்தமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பு அண்மையில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
வாள்வெட்டு குழுக்களின் இலக்கு இரண்டாகும். அதில் ஒன்று வன்முறையில் ஈடுபடும் குழு மற்றயது தம்மை பிரபல்யப்படுத்துவதற்காக ஹீரோயிசம் காண்பிப்பதற்காக செயற்படும் குழு,
வன்முறையையை நோக்காக கொண்ட குழுக்களை சட்டத்தின் ஊடாகவே தண்டிக்கவேண்டும். ஹீரோயிசம் காண்பிப்பதற்கு முயற்சிக்கும் குழுக்களை சமூக சேவைகளில் ஈடுபடுத்தி
அதன் ஊடாக சிறந்த முறையில் செயற்படுபவர்களை கௌரவிக்கவேண்டும். அப்போது நிச்சயமாக அவர்களிடம் மனமாற்றம் உருவாகும். அதன் ஊடாக வாள்வெட்டு வன்முறைகளை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.
என நம்புகிறேன் என ஆளுநர் கூறியுள்ளார்.