கடல்நீர்மட்டம் உயர்வதால் தடுப்பணைகளை முழுமையாக திறக்க முடியாது..! நீர்ப்பாசன திணைக்களம் தொிவிப்பு..
யாழ்.மாவட்டத்தில் உள்ள உவர்நீர் தடுப்பணைகளில் 3 கதவுகள் மட்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடல் நீர்மட்டம் அதிகரிப்பதால் ஏனைய கதவுகளை திறக்க முடியாதுள்ளதாக வடமாகாண நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் தம்பிராஜா ராஜகோபு கூறியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறியுள்ளதாவது, யாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம் பெய்த கனமழை காரணமாக தொண்டைமானாறு, அரியாலை மற்றும் அராலி பகுதிகளில் உள்ள உவர்நீர் தடுப்பணைகளின் 3 கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
கடல் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் முழுமையாக கதவுகளை திறக்க முடியாத போதிலும் கடல் மட்டத்தின் அளவைப் பொறுத்து மேலும் கதவுகளை திறக்கவேண்டுமா? என்பதை தீர்மானிக்க முடியும்.
தொண்டமனாறு தடுப்பணையின் 6 கதவுகளும், அரியாலை தடுப்பணையில் 20 கதவுகளும், அராலித் தடுப்பணையின் 10 கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது. தொண்டமனாறு தடுப்பு அணை நீர்மட்டம் 3 அடி 6 இஞ்சியாகக் காணப்படுகின்ற நிலையில்
கடலின் நீர்மட்டம் 3 அடி 5 இஞ்சியாகக் காணப்படுகிறது. இந்நிலையில் கடல் மட்டத்தின் நீர்மட்டம் குறைவடைந்தால் தடுப்பு அணையின் ஏனைய கதவுகளையும் திறக்க முடியும் அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் கடல்நீர் உட்புக வாய்ப்பு இருப்பதாக
அவர் மேலும் தெரிவித்தார்.