SuperTopAds

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறவருவோருக்கு பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறவருவோருக்கு பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..!

யாழ்.மாவட்டத்தில் தொடரும் கனமழை பெய்துவருவதுடன், தாதியர்கள், தணை மருத்துவசேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவோர் தாமதமாக வருமாறு பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும் எனவே பொதுமக்கள் தற்போதுள்ள மழை குறைவடைந்த பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முடியும் 

எனத் தெரிவித்துள்ளதோடு அத்தோடு சாதாரண சிகிச்சை பெறுவோர் தற்போதைய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்து அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்காது கிளினிக் பகுதி மற்றும் இது இருதய சிகிச்சை கிளினிக் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக 

தற்போது சிகிச்சைகள் இடம் பெறாத நிலை காணப்படுகின்றது எனவே பொதுமக்கள் சாதாரண சிகிச்சை பெற வருவோர் மழை முடிந்த பின்னர் வருகை தந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுமாறும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார். 

எனினும் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஏனைய விசேட வைத்திய சேவைகள் அனைத்தும் இடம்பெறுவதாகவும் எனினும் சாதாரண சிகிச்சைகள் மாத்திரம் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.