யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று விடுமுறை! அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று விடுமுறை! அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு..

யாழ்.மாவட்டத்திலு்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்டக் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.

மாவட்டத்தில் பெரும் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுகிறது. மாகாண ஆளுநருடன் ஆலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

என யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு