SuperTopAds

யாழ்.மாவட்ட மீனவர்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள எச்சரிக்கை! அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மீனவர்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள எச்சரிக்கை! அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

சீரற்ற காலநிலை நீடிப்பதுடன் யாழ்.மாவட்ட கடற்பகுதி கொந்தளிப்பாக காணப்படுவதுடன், கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம். என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

மாவட்டச் செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

யாழ்.மாவட்டத்திலே வடகிழக்கு பருவப் பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளது. அந்த வகையிலே யாழ்.மாவட்டத்திலே மழை பெய்து வருகின்றது. நேற்று முன்தினம் 6ஆம் திகதி 33.5 சதவீத மழைதான் 

யாழ்.மாவட்டத்திலே பெய்துள்ளது. இருந்த போதிலும் ஏனைய மாவட்டங்களிலே இந்த மழைவீழ்ச்சி சற்று அதிகமாக இருந்ததுடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

அவ்வாறான வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலைமை இன்னும் ஏற்படவில்லை. இருந்தபோதும் எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள், இலங்கையின் தென்கிழக்குப் பக்கத்திலே ஏற்பட்டிருக்கின்ற தாழமுக்க நிலையானது 

மேலும் வலுப்பெற்று நகரும்போது யாழ்.மாவட்டத்திற்கும் அந்த மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய சாத்தியமுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எமக்கு அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையிலே கடற்சீற்றம் சற்று அதிகமாக இருக்கக்கூடிய நிலை உள்ளது. ஆகவே கடற்றொழிலாளர்களை கடலுக்கு செல்லவேண்டாம் என கூறுகின்றோம் என்றார்.