யாழ்.வடமராட்சி கடலில் தொழிலுக்கு சென்ற 15ற்கும் மேற்பட்ட படகுகளும் 45ற்கும் மேற்பட்ட மீனவர்களும் கரை திரும்பவில்லை!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கடலில் தொழிலுக்கு சென்ற 15ற்கும் மேற்பட்ட படகுகளும் 45ற்கும் மேற்பட்ட மீனவர்களும் கரை திரும்பவில்லை!

கோப்புபடம்

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் கடற்றொழிலுக்கு சென்ற 15ற்கும் மேற்பட்ட பகுகளும் 45 ற்கும் அதிகமான மீனவர்களும் இதுவரை கரை திரும்பவில்லை என உறவினர்கள் கூறியுள்ளனர். 

வடக்கில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சியின் கடற்பரப்பும் கடும் காற்றுடன் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகின்றது.

இன்று அதிகாலை மீன்பிடிக்க பருத்தித்துறை, முனை உட்பட்ட பகுதிகளிலிருந்து 15 படகுகளில் சென்ற 45 இற்கும் அதிகமான மீனவர்கள் இன்று நண்பகல் வரையில் கரை திரும்பவில்லை. 

என கவலை தெரிவித்துள்ள மீனவர்களின் உறவினர்கள் கடற்கரைகளில் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். வழமையாக காலை 8மணியளவில் அவர்கள் கரை திரும்புவது வழக்கம் என்றும் 

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் அச்சமாக உள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் 

சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு