தேசிய விருது பெற்ற பெண் கலைஞருக்கு ஒரு வருடம் ஆகியும் சான்றிதழ் வழங்காத அமைச்சு..!

ஆசிரியர் - Editor I
தேசிய விருது பெற்ற பெண் கலைஞருக்கு ஒரு வருடம் ஆகியும் சான்றிதழ் வழங்காத அமைச்சு..!

அரச உத்தியோகத்தில் உள்ள பெண் கலைஞர்களுக்கான போட்டியில் தேசிய விருதை பெற்ற எனக்கு ஒரு வருடம் கழிந்தும் சான்றிதழ் கைகளுக்கு கிட்டவில்லை என பெண் கலைஞர் ஒருவர் அமைச்சர் முன் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

நேற்றைய தினம் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்டத்திலுள்ள கலைஞர்களுக்கும் தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே 

அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த வருடம் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட அரச உத்தியோகத்தில் உள்ள கலைஞர்களுக்கான தேசியப் போட்டியில் யாழ்.மாவட்டத்திலிருந்து பங்குபற்றி தேசிய விருதைப் பெற்றேன்.

எனக்கு தேசிய விருது கிடைத்தமை தொடர்பில் நான் அப்போது பெருமகிழ்ச்சி அடைந்தேன் ஆனால் குறித்த விருதுக்கான சான்றிதழ் அதற்கான பரிசுப்பொருட்கள் எனது கைகளுக்கு கிட்டவில்லை.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சுக்கு நான் எழுத்து மூலமான கடிதத்தை அனுப்பியும் ஆக்கப்பூர்வமான பதில் எனக்கு கிட்டவில்லை. மேலும் கலைஞர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளுக்கு 

பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களின் தகுதியை பரிசீலனை செய்து அவர்களுக்கான அடையாள அட்டையை விரைவாக பெற்றுக்கொடுக்க உதவ வேண்டும். மேலும் கலாபூஷண விருதுக்காக 

மாவட்ட அடிப்படையில் தெரிவு செய்யப்படும் கலைஞர்களின் எண்ணிக்கை முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்து வருகின்றது. ஆகவே பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற அளவில் 

இவ்வாறான பிரச்சினைகளை தீர்த்து தரவேண்டும் என பொண் கலைஞர் அமைச்சரிடம் எடுத்துரைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விதுர அடையாள அட்டைகளை விரைவாக வருவதற்குரிய ஏற்பாடுகளைத் 

தாம் செய்வதாக தெரிவித்ததோடு கலாபூஷண விருதுக்கான கலைஞர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் அவர்களுக்கு வழங்கும் பணப்பரிசின் தொகை குறைவடையும் என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு