யாழ்.காரைநகரில் நான் விகாரை கட்டுவதற்கு சென்றேனா? காரைநகரில் மக்களை பயன்படுத்தில் அரசியல் நடந்துள்ளது..

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் நான் விகாரை கட்டுவதற்கு சென்றேனா? காரைநகரில் மக்களை பயன்படுத்தில் அரசியல் நடந்துள்ளது..

யாழ்.காரைநகரில் மக்கள் கூடியிருந்தமைக்கு பின்னால் அரசியல் உள்ளது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க கூறியுள்ளார். 

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் காரைநகரில் மக்கள் குழப்படைந்த சம்பவம் குறித்து

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

காரைநகரில் அமைச்சரை விரட்டியடித்த மக்கள் என பத்திரிகை ஒன்றில் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருக்கின்றது, 

இனவாதம் மதவாதத்தை தூண்டி மக்களை குழப்பம் அடைகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை நான் காரைநகருக்கு விஜயம் செய்தபோது 

அங்கே மக்கள் கூடியிருக்கின்றார்கள். அமைச்சர் ஒருவர் வருகிறார் இங்கே விகாரை கட்டுவதற்காக என்று. ஏன் அவ்வாறு பொய் கூறுகின்றார்கள். 

இவ்வாறு மீண்டும் மதவாதம் இனவாதத்தை தூண்டி சாதாரண மக்களை மீண்டும் பிரச்சினை கூலாக நினைக்கின்றார்கள் .

காரைநகரில் இடம்பெற்ற சம்பவத்திற்கு பின்னால் ஒரு அரசியல் உள்ளது என்பதை நான் உணருகின்றேன் என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு