யாழ்.மாவட்டத்தில் காணி இல்லாத 186 குடும்பங்களுக்காக, 116 மில்லியன் செலவில் காணி கொள்வனவு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் காணி இல்லாத 186 குடும்பங்களுக்காக, 116 மில்லியன் செலவில் காணி கொள்வனவு..!

யாழ்.மாட்டத்தில் காணியற்ற 186 குடும்பங்களுக்கு காணி கொள்வனவு செய்வதற்கு சுமார் 116 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்ட செயலகத்தால் காணியற்ற குடும்பங்களுக்காக அரச நிதியில் காணி கொள்வனவு செய்து வழங்கும் செயற் திட்டத்திற்கு அமைய 186 குடும்பங்களுக்கு இரண்டு பரப்பு வீதம் 

கொள்வனவு செய்வதற்காக 116 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே யாழ்.மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரச நிதியில் காணி கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தில் கணக்கெடுப்பின் பிரகாரம் இன்னும் சுமார் 126 குடும்பங்களுக்கு காணி வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. அவர்களில் 46 குடும்பங்களுக்கு காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு வரும் நிலையில் 

விரைவில் அவர்களுக்கான காணிகள் வழங்கி வைக்கப்படும். காணி வழங்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் 10 லட்சம் ரூபா வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ளதோடு அவர்களுக்குத் தேவையான 

மலசலகூட வசதிகள் மின்சாரம் என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்படும். ஆகவே யாழ் மாவட்டத்தில் காணி அற்ற மக்களுக்காக கட்டங்கட்டமாக காணிகள் வழங்கி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலகம் 

மேற்கொண்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு