நாட்டில் ஜனநாயக சூழலை உருவாக்ககூடிய ஒரே தலைவர் சஜித் பிறேமதாஸ மட்டுமே! உமாச்சந்திர பிராகாஸ் சுட்டிக்காட்டு..
இலங்கையில் வாழும் அனைது இன மக்களும் எதிர்பார்க்கின்ற ஜனநாயக சூழலை ஏற்படுத்தக் கூடிய ஒரே ஒரு தலைவர் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச மட்டுமே என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளரும் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளருமான உமா சந்திரபிரகாஷ் தெரிவித்தார்.
இன்றைய தினம் புதன்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்கள் பாங்குபற்றிய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியினை வடக்கில் பலப்படுத்தும் முகமாக கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில்
ஒவ்வொரு மாவட்டங்களிலும் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறோம்.எதிர்காலத்தில் ஐக்கியமக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் முகமாக பல்வேறு வேலைத்திட்டங்களை நாடு முழுவதிலும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். தற்போதைய அரசாங்கம் மக்களை பல வழிகளிலும்
துன்புறுத்தும் அரசாங்கமாக உருவெடுத்து வருகின்றது. பொருட்கள் விலையேற்றம்,விவசாயிகளுக்கு உரம் இல்லாமை, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என தற்போதய அரசாங்கம் மக்களை சிரமத்துக்குள்ளாக்கியுள்ளது. பொருட்களின் விலைகள் தொடர்பில்
விற்பனையாளர்களே தீர்மானம் எடுக்கின்ற நிலையில் நாடு சென்று கொண்டிருக்கின்றது. அரசி இல்லாவிட்டால் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுங்கள் என பொறுப்பு வாய்ந்த அமைச்சர் மக்களுக்கு கூறுகிறார். தெற்கு மக்கள் விழிப்படைய தொடங்கிவிட்டார்கள் இனிமேலும் இந்த ஆட்சியை கொண்டு செல்ல முடியாது
என தீர்மானித்து விட்டார்கள்.நாட்டில் மாகாணசபை அதிகாரங்கள் செயலற்று காணப்படுகின்ற நிலையில் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த கூடிய தலைவராக சஜித் பிரேமதாச மட்டுமே காணப்படுகிறார்.சஜித் பிரேமதாச இஞ்சம் ஊழல் அற்ற தலைவர் மக்களைப் பற்றியும்
அவர்களின் ஜனநாயகத்தை பற்றியும் நன்கு அறிந்தவர்.ஆகவே நாட்டை முன்னோக்கிய பாதையில் கொண்டு சென்று அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரே ஒரு தலைவர் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச மட்டுமே என அவர் மேலும் தெரிவித்தார்.