படையினர் உற்பத்தி செய்த சேதனை பசளை யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு இன்று அறிமுகப்படுத்தப்பட்டது! நிகழ்வில் இராணுவ தளபதி பங்கேற்பு..

ஆசிரியர் - Editor I
படையினர் உற்பத்தி செய்த சேதனை பசளை யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு இன்று அறிமுகப்படுத்தப்பட்டது! நிகழ்வில் இராணுவ தளபதி பங்கேற்பு..

படையினரால் உற்பத்தி செய்யப்பட்ட நச்சுத் தன்மையற்ற சேதன பசளையை யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வுக்காக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். 

இன்று மதியம் 1.30 மணிக்கு பலாலியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் சேதன பசளை உற்பத்திகள்,

கூட்டெருக்கள்,இலைக் கரைசல்கள் என்பன சம்பிரதாயபூர்வமாக விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இலங்கையின் விவசாயத்திலே முழுமையாக சேதனப் பசளையினை உபயோகப்படுத்த வேண்டுமென்ற 

ஐனாதிபதியின் நோக்கத்திற்கமைவாகஇராணுவத்தினரின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட உற்பத்திகளே இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி ஜகத் கொடித்துவக்கு, யாழ் மாவட்ட விவசாயத் திணைக்கள உயர் அதிகாரிகள் உட்பட பல உயர் இராணுவ அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு