வடமாகாண மக்களுக்கு மாகாண சுகாதாரதுறை விடுத்துள்ள எச்சரிக்கை..! பண்டிகை காலம் பேராபத்தை உருவாக்கலாம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண மக்களுக்கு மாகாண சுகாதாரதுறை விடுத்துள்ள எச்சரிக்கை..! பண்டிகை காலம் பேராபத்தை உருவாக்கலாம்..

வடமாகாணத்தில் கொரோனா தொற்று அபாயம் தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பண்டிகை காலத்தில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ள தவறினால் பேராபத்து உருவாகும். என வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இனி வரும் நாட்களில் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சுகாதார முறைகளைப் பின்பற்றவேண்டும்.

கடந்த புது வருடத்தின் போது ஏற்பட்ட கொத்தணி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல் அது பேராபத்தை உண்டாக்கும் அபாயம் உள்ளதாகவும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு