SuperTopAds

முள்ளிவாய்க்கால் இராணுவத்திடம் ஏகே47 கேட்ட சிறுவன்; குழம்பிய தளபதி

ஆசிரியர் - Admin
முள்ளிவாய்க்கால் இராணுவத்திடம் ஏகே47 கேட்ட சிறுவன்; குழம்பிய தளபதி

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி ஒன்றில் கல்விகற்கும் சிறுவன் ஒருவர் இராணுவத்திடம் ஏ.கே47 சுடுகலன் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுவனின் கோரிக்கைக்கு பதிலாக 681ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி விளையாட்டு முச்சக்கரவண்டி ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்துத் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விழா, நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் 681 ஆவது படைப்பிரிவு இராணுவ தளபதி கௌரவ விருந்தினராக கலந்து கொண்டே இவ்வாறு பரிசளித்துள்ளார்.

குறித்த முன்பள்ளி மாணவாகளுக்கு அண்மையில் அப்பியாசக் கொப்பிகள் வழங்குவதற்காகச் சென்ற குறித்த இராணுவத் தளபதி என்ன வெளையாட்டுப் பொருட்கள் வேண்டும் என்று சிறுவர்களிடம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து சிறுவன் ஒருவர், தனக்கு ஏகே 47 துப்பாக்கி ஒன்று வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்தப் பதிலை எதிர்பாராத இராணுவத்தினர் சற்று குழம்பியிருந்தவேளை, சிறுவனை அழைத்த இராணுவத்தளபதி வேறு விளையாட்டுப்பொருள் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சிறுவன் உலங்கு வானூர்தி ஒன்று வேண்டும் என்றார்.

இந்த நிலையிலேயே நேற்றைய தினம் நடந்த முன்பள்ளி விளையாட்டுவிழாவில் விருந்தினராகக் கலந்துகொண்ட இராணுவத் தளபதி, குறித்த சிறுவனுக்கு விளையாட்டு முச்சக்கரவண்டி ஒன்றை வழங்கியதுடன் ஏனைய சிறுவர்களுக்கும் விளையாட்டு வாகனங்கள் வழங்கியுள்ளார்.