அமொிக்க கடற்படையின் VF-143 விசேட தாக்குதல் படையணியில் கடமையாற்றிய ஒருவர் உட்பட இருவர் ஆயுதங்களுடன் இலங்கையில் கைது..!

ஆசிரியர் - Editor I
அமொிக்க கடற்படையின் VF-143 விசேட தாக்குதல் படையணியில் கடமையாற்றிய ஒருவர் உட்பட இருவர் ஆயுதங்களுடன் இலங்கையில் கைது..!

அமொிக்க கடற்படையின் VF-143 விசேட தாக்குதல் படையணியில் கடமையாற்றிய சிறப்பாய் ஒருவர் இலங்கையில் ஆயுதங்கள் மற்றும் போர் தளபாடங்களுடன் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

கண்டி - திகன பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் அதிக செயற்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் பொருத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டுள்ளனர். 

இதன்போதே குறித்த நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதன்போது, 100 துப்பாக்கி ரவைகள், ரம்போ வகை கத்தி, துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தொலைநோக்கி, 

துப்பாக்கியொன்று மற்றும் 04 சிறு Walkie-talkie-களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இலக்கத் தகடுகளற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள், இலக்க தகடுகளுடன் கூடிய 04 மோட்டார் சைக்கிள்கள், 

அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் வாகன இலக்கத் தகடொன்று, ஒரு கடவுச்சீட்டு மற்றும் 7 இலட்சம் ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 44 வயதான 

சமிந்த அலோசியஸ் பண்டார என்பவர், 2004 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி மாதம் வரை அமெரிக்க கடற்படையில் VF-143 படையணியில் சேவையாற்றியமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வர்ஜீனியாவிலுள்ள VF-143 படையணி, விசேட தாக்குதல் பயிற்சிபெற்ற சிப்பாய்களைக் கொண்ட பிரிவாகும். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை சிப்பாய், தெஹிவளை – அத்திடிய பகுதியில் நிரந்தர முகவரியுடையவர் என்பதும் 

கண்டி திகனையில் வாடகைக்கு வீடொன்றை வாங்கியுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள மற்றைய நபர், டெரன்ஸ் மரியோ பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, 

அவர் குற்றச்செயல்கள்தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்டு, கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவராவார். இவர் நாவலயில் நிரந்தர வதிவிடத்தைக் கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ரவைகள் 45 ACP வகை துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படுபவை என்பதோடு, அந்த துப்பாக்கி அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி வகையை சேர்ந்தது என்பதும் 

பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் நேற்று தெல்தெனிய மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய LJ.V. பெர்னாண்டோ முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, 

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பகிரங்க விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ரவைகளை அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி, அதன் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு