சூடு பிடிக்கும் ஞானசார தேரர் தலைமையில் செயலணி..! நீதி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் பதவி விலகலாம்..! கொழும்பு ஊடகங்கள் ஆரூடம்..
ஞானசார தேரர் தலைமையிலான “ஒரு நாடு ஒரு சட்டம்” செயலணி நியமனத்திற்கு எதிர்ப்பு தொிவித்து நீதியமைச்சர் அலிசப்ரி உட்பட சில அமைச்சர்கள் தங்கள் அமைச்சு பதவியை துறக்கவுள்ளனர் என ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
2019 ஜனாதிபதி தேர்தலில் வியத்மகவின் சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நீதியமைச்சர் இந்த எதிர்பாராத நடவடிக்கையால் கடும் அதிருப்தியில் உள்ளார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன என ஐலண்ட் குறிப்பிட்டுள்ளது.ஜனாதிபதி பிரிட்டனில் இருந்து நாடு திரும்பியதும்
நீதியமைச்சர் ஜனாதிபதியிடம் தனது முடிவை தெரிவிப்பார் என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரதமருடன் நீதியமைச்சர் ஆராய்ந்துள்ளார். நீதியமைச்சரை அவசரப்பட்டு முடிவெடுக்கவேண்டாம் என பிரதமர் கேட்டுக்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஞானசார தேரரின் நியமனம் குறித்து நீதியமைச்சினை கலந்தாலோசிக்கவில்லை என நீதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஞானசார தேரர் குறித்த அறிவிப்பு எங்களிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என நீதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.