கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் அபாயம் நீங்கிவிட்டதாக அர்த்தமில்லை..! நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு..
நாட்டில் சுகாதார வழிகாட்டல்கள், கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் செய்யப்பட்டிருந்தாலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது மிக முக்கியமானதாகும். என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியுள்ளார்.
மித்ரா சக்தி இராணுவப் பயிற்சியை அவதானித்த பின்னர் இராணுவ தளபதி ஊடகங்களுக்கு இந்தக் கருத்தை வெளியிட்டார். தளர்வுகள் அறிவிக்கப்படவுடள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடுகளிலும் தொற்று மீளவும் அதிகரித்திருக்கின்றது.
எனவே பொதுமக்கள் புத்திசாலித்தனமாக சிந்திக்கவும் செயல்படவும் வலியுறுத்துகின்றோம். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் பிற சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.