முடிவின்றி முடிந்தது ஆசிரியர் - பிரதமர் பேச்சு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையே இன்றையதினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இறுதி முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான தங்களது நிலைப்பாட்டை நாளை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள், அதுவரை வேலைநிறுத்த நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்துள்ளன.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்க, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை இன்று நண்பகல் 12 மணிக்கு அலரி மாளிகைக்கு வருமாறு பிரதமர் அலுவலகம் நேற்றைய தினம் அழைப்பு விடுத்திருந்தது.