SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி பெறுவதற்கு முன்பதிவுகளை செய்யலாம்..! வடமாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி பெறுவதற்கு முன்பதிவுகளை செய்யலாம்..! வடமாகாண சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் விசேட கவனம் தேவைப்படும் 12 வயது தொடக்கம் 19 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெறும் நிலையில் அதனை இலகுபடுத்த புதிதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, குறித்த சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தடுப்பூசி செலுத்தப்படும் வைத்தியசாலைகளில், முன்பதிவு செய்துகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்களை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் 

வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். முன்பதிவு செய்துகொள்வதற்கான இலக்கங்கள் கீழ்வருமாறு

யாழ். போதனா வைத்தியசாலை – 077 07 41 385

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை – 076 12 75 210

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை – 077 20 73 098

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை – 077 13 40 519

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை – 070 29 00 000