யாழ்.கலாச்சார மத்திய நிலையத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான பராமரிப்பு செலவை இந்தியா பொறுப்பேற்கும்! இந்திய வெளியுறவு செயலாளர் அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.கலாச்சார மத்திய நிலையத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான பராமரிப்பு செலவை இந்தியா பொறுப்பேற்கும்! இந்திய வெளியுறவு செயலாளர் அறிவிப்பு...

இந்தியாவின் நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும் யாழ். கலாச்சார மத்திய நிலையத்தில் ஐந்து ஆண்டு பராமரிப்பு செலவை இந்தியா பொறுப்பேற்கும் என இன்று யாழ்.விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.

இன்று மாலை யாழ்ப்பாணம் வருகை தந்த அவர், யாழ்.கலாசார மத்திய நிலையத்தின் கட்டிடத்தை  பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

தமிழ் மக்களின் கலாசார பண்பாடுகளுக்காக இந்தியாவின் 11 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிப் பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ள யாழ்.கலாச்சார மத்திய நிலையம் இலங்கை அரசின் பங்களிப்புடன் விரைவில் திறக்கப்படும்.

திறந்து வைக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு கட்டடத்தின் பராமரிப்பு செலவினையும் இந்தியாவே பொறுப்பேற்க உள்ளது.

இலங்கைக்கு இந்தியா பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. என்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு