யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை உறுப்பினரான மாற்றுத் திறனாளியை தாக்க முயற்சித்த பிரதேசசபை செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை உறுப்பினரான மாற்றுத் திறனாளியை தாக்க முயற்சித்த பிரதேசசபை செயலாளர், உள்ளுராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு..

யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை உறுப்பினரான மாற்று திறனாளியை பிரதேசசபை செயலாளர் தாக்க முயற்சித்தமை கண்டனத்திற்குரியது என யாழ்.மாநகர முதல்வர் கூறியுள்ளார். 

நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்.மாநகர சபையின் முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே

அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், எமது கட்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான குறித்த உறுப்பினரை 

சபையின் செயலாளர் தாக்க முற்பட்டுள்ளார். குறித்த உறுப்பினர் மாற்றுத்திறனாளியாக தன்னை எண்ணாமல் தன்னால் முடிந்தவரை மக்களுக்கு சேவையாற்றும் ஒருவர். 

கடந்த 29 ஆம் திகதி பெறுகைக்குழு கூட்டத்தில் தனது கருத்தை பதிவு செய்ய முற்பட்டபோது செயலாளர் தாக்குதல் நடத்தும் அளவுக்கு முயற்சித்துள்ளார்.

சுயமாக வெளிப்படுத்துகின்ற கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும் அவ்வாறு அல்லாமல் ஒரு சபையை நடாத்தும் அரச அதிகாரி 

இவ்வாறு செயற்படுவது வெட்கமான விடையம்.ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கும் உள்ளூராட்சி ஆணையாளருக்கும் தெரியப்படுத்தியுள்ளேன் 

அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு