SuperTopAds

தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? என்ற கேள்விக்கு தேசியத்தலைவர் பிரபாகரனின் பெயர்!!

ஆசிரியர் - Admin
தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? என்ற கேள்விக்கு தேசியத்தலைவர் பிரபாகரனின் பெயர்!!

தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? என்ற கேள்விக்கு தேசியத்தலைவர் பிரபாகரனின் பெயரை எழுதியுள்ளான் கிளிநொச்சி மாணவனொருவன்.

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் ஒன்றில் தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? என்ற கேள்விக்கே தலைவர் பிரபாகரனின் பெயரை எழுதியிருக்கிறான்.

கிளிநொச்சியில் உள்ள மற்றுமொரு பாடசாலையில் இவ்வருடம் நடைபெற்ற முதலாம் தவணை குடியியல் பரீட்சையில் ஆரம்ப காலத்தில் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை என்ன என்ற கேள்விக்கு எல்லோரும் பௌத்த மதத்திற்கு மாறினர், சைவ சமய கோயில்களை இடித்தனர், மன்னர் பௌத்திற்கு உதவினர் என்று எழுதியிருந்தான்.

அண்மையில் நடந்த மற்றுமொரு பரீட்சையில் தூக்குக் குண்டை பயன்படுத்துபவர் யார் என்ற கேள்விக்கு ஒரு மாணவன் ஆமி எனப் பதில் அளித்தார். ஏதுமறியாத பருவத்தில் உள்ள இச் சிறுவர்களிடமிருந்து வரும் இயல்பான பதில்கள் நம் தேசத்தின் உணர்வையும் நாட்டின் வரலாற்றையும் நிலவரத்தையும் எடுத்துரைக்கின்றனவென கவிஞர் தீபச்செல்வன் கருத்து வெளியிட்டுள்ளார்.