ஊரடங்கு தொடர்பில் முக்கிய தீர்மானம்..! ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் உயர்மட்ட கூட்டம், அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் கடமை நேரத்திலும் மாற்றம்..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு தொடர்பில் முக்கிய தீர்மானம்..! ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் உயர்மட்ட கூட்டம், அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் கடமை நேரத்திலும் மாற்றம்..

ஜனாதிபதி நாடு திரும்பியவுடனேயே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை 1ம் திகதிக்கு பின் நீடிப்பதா? நீக்குவதா? என்பது தொடர்பாக தீர்மானிக்கப்படவுள்ளது. 

அமெரிக்காவிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை நாடு திரும்பவுள்ளார். அதன் பின்னர் கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

நாடு திறக்கப்படுமாயின் புதிய சுகாதார வழிகாட்டல்களை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி அரச அலுவலர்கள் கடமைகளுக்கு சமூகமளிக்கும் நேரம் காலை 9 மணியாகவும், தனியார்துறை ஊழியர்கள் சமூகமளிக்கும் நேரம் காலை 10 மணியாகவும் 

மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. அதற்கமைய போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.

அரச சேவையாளர்களுக்கான விசேட சுற்றறிக்கையொன்றினை பொதுநிர்வாக அமைச்சு நாளை வெளியிடவுள்ளது.

நாடு திறக்கப்பட்டாலும் பொதுநிகழ்வுகள் மற்றும் திருமண நிகழ்வுகள் நடத்தப்பட உடனடி அனுமதி வழங்கப்படாது.

பாடசாலைகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு