யாழ்.தீவகத்திற்கு உளநல மருத்துவர் இல்லையா? நியமிக்கப்பட்ட மருத்துவர் எங்கே? ஆராய்ந்து பார்ப்பதாக கூறும் மாகாண சுகாதார பணிப்பாளர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவகத்திற்கு உளநல மருத்துவர் இல்லையா? நியமிக்கப்பட்ட மருத்துவர் எங்கே? ஆராய்ந்து பார்ப்பதாக கூறும் மாகாண சுகாதார பணிப்பாளர்..

யாழ்.தீவக வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட உளநல மருத்துவர்கள் அங்கு பெரும்பாலான நாட்களில் கடமைக்கு செல்வதில்லை. என குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது. 

யாழ்.தீவு பகுதிகளுக்கு பொதுவான வைத்தியசாலையாக ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை விளங்குகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆதார வைத்திய சாலைகள் அனைத்துக்கும் உளநல மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டு அப்பகுதிகளில் சேவையாற்றுகின்றனர்.

தீவக பகுதிகளில் சேவையாற்றுவதற்காக உளநல மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட்டபோதும் அவர் பெரும்பாலான நாட்களில் அங்கு கடமைக்கு செல்வதில்லை. 

என குற்றச்சாட்டுகள் எழுகின்றது. அதிக தேவைகளுடன் வாழும் தீவக மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் மற்றும் தனிமைப்படுத்தல் உரடங்கு சட்டத்தினால் 

பல்வேறு மன நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் ஒரு மருத்துவர் தொடர்ச்சியாக தீவகப் பகுதிகளை கவனிப்பதற்காக இருக்க வேண்டும்.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய ஆறுமுகம் கேதீஸ்வரனைத் தொடர்பு கொண்டபோது 

அதனை தாம் ஆராய்ந்து பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு