தனிமைப் படுத்தப்பட்டுள்ள வேவல்வத்தை தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்! -இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கை -

ஆசிரியர் - Admin
தனிமைப் படுத்தப்பட்டுள்ள வேவல்வத்தை தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்! -இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கை -

பம்பரபொடுவ வேவல்வத்தை பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக அவதியுறும் மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண தொகை கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்தார்.

வேவல்வத்தை தோட்டத்தை சேர்ந்த கொவிட் -19 நோய்த் தோற்றலர்கள் உள்ளிட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபசெயலாளர் ரூபன் பெருமாள் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களால் நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு பம்பரபொடுவ இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர் திரு.வசந்த் நடராஜ் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன்போது இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர்களான சத்யமோகன் சக்திவேல் மற்றும் ஜெயகாந்தன் வீரமலை ஆகியோர் கலந்துகொண்டனர். 

மேலும் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் முன் வந்து மக்களுக்கு உதவி செய்யும் கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு வேவல்வத்தை தோட்ட மக்கள் நன்றி தெரிவித்ததாக ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு