யாழ்.மாவட்டத்திலுள்ள வாள்வெட்டு குழுக்களுக்கு போதைப் பொருள் மாபியாக்களுடன் தொடர்பா..? தீவிர விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், 4 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலுள்ள வாள்வெட்டு குழுக்களுக்கு போதைப் பொருள் மாபியாக்களுடன் தொடர்பா..? தீவிர விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், 4 பேர் கைது..

இலங்கையில் உள்ள மிகப்பெரும் போதைப் பொருள் மாபியாக்களுடன் தொடர்பில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த முத்து என்று அழைக்கப்படும் 28 வயதான நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களை ஒரு வாரம் தடுத்துவைத்து விசாரிக்க யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கின்றது. நேற்றுமுன்தினம் இரவு யாழ்.திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் 2.94 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் காரில் இருந்து வாளும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது

யாழ்.1ம் குறுக்குத் தெருவில் வசிக்கும் 28 வயதான முத்து என்ற சந்தேகநபரும் அவருடன் இருந்த 19 வயதான 3 பேருமே கைது செய்யப்பட்டனர். முத்து என்ற சந்தேகநபர் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என கூறப்படுகின்றது. 

மேலும் குறித்த முத்து என்ற நபர் இலங்கையில் உள்ள மிகப்பெரும் போதைப்பொருள் மாபியாக்களுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதால் அவரை ஒருவாரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க

பொலிஸார் பொலிஸார் நேற்று நீதிமன்றில் விண்ணப்பம் செய்திருந்தனர். இந்த விண்ணப்பத்தை பரிசீலணை செய்த நீதிவான் பிரதான சந்தேகநபரான முத்து என்பவரை ஒரு வாரகாலம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு