யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் வெளிமாவட்டத்தில் தகனம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் வெளிமாவட்டத்தில் தகனம்!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் நேற்று ஞாயிற்று கிழமைவரை வெளிமாவட்டங்களில் தகனம் செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களுடன் வெளி மாவட்டங்களுக்கு மின் தகனத்திற்காக அனுப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறு அனுப்பப்படுகின்றன சில பூதவுடல்களுக்கு உறவினர்களால் மின் தகனம் செய்வதற்குரிய பணம் மற்றும் பூதவுடல்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான பெட்டிகளை வாங்க இயலாதவர்களுக்கு அதனை கொடையாளர்களிடம் பெற்றுகொடுக்கிறோம்.

தகனம் செய்வதற்காக அனுப்பப்படும் பூதவுடல்களுடன் அவர்களின் உறவினர்கள் கூடவே செல்ல விரும்பினால் அவர்களில் சிலரை மட்டும் அழைத்துச் செல்கிறோம். உறவினர்கள் எல்லோரும் செல்ல முடியாத சூழ்நிலையில் இறந்த பூத உடல்களை அடக்கம் செய்வதற்குரிய 

அனைத்து ஏற்பாடுகளும் யாழ்.போதனா வைத்தியசாலையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உறவினர்கள் எல்லோரும் அதில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அங்கு நடைபெறும் தருணத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டு 

அவர்களுக்குரிய அஞ்சலிகளை தத்தம் வீடுகளில் செலுத்த வேண்டும். தமது உறவினர்களை மின் தகனம் செய்வதற்காக நிதி மற்றும் அடக்கம் செய்வதற்கான பெட்டிகள் என்பவற்றை கலாநிதி ஆறு திருமுருகனின் தலமையில் செயற்படும் சிவபூமி அறக்கட்டளை 

மற்றும் தியாகி அறக்கட்டளை வாமதேவன் தியாகேந்திரன் ஆகியோர் ஊடாக பெற்றுக் கொடுக்கிறோம். போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றினால் இறந்த பூத உடல்களை பிரேத அறையில் உரிய முறையில் 

அதற்கு உரிய மரியாதைகளுடன் பாதுகாக்கிறோம். போதனா வைத்தியசாலையின் நலம்புரிச் சங்கம் இறந்த பூத உடல்களை வெளி மாவட்டத்துககு கொண்டு செல்வதற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் தமது சேவைகளை வழங்கி வருகிறார்கள்.

உயிரிழந்த பூத உடல்களை வெளி மாவட்டத்துக்கு அனுப்புவதற்கு ஏற்ற ஒழுங்ககளைக் கவனிப்பதற்காக வைத்தியர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு பூதவுடல்களும் உரிய முறையில் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஆகவே கொரோனா தொற்றின் காரணமாக தமது உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு