யாழ்.மாவட்டத்தில் கர்ப்பவதி பெண் உட்பட 56 பேருக்கு தொற்று! வடக்கில் 80 பேருக்கு தொற்று உறுதி..
யாழ்.மாவட்டத்தில் 56 பேர் உட்பட வடக்கில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 294 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 80 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
யாழ்.மாவட்டத்தில் 56 பேருக்கு தொற்று.
யாழ்.சிறைச்சாலையில் 34 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 பேருக்கும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் (10ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பவதி) தனியார் வைத்தியசாலையில் ஒருவர்,
வவுனியா மாவட்டத்தில் 14 பேருக்கு தொற்று.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கும், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருக்கும், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவருக்கும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 03 பேருக்கு தொற்று.
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 02 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவருக்கும்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 04 பேருக்கு தொற்று.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியாசலையில் 02 பேருக்கும், வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலையில் ஒருவருக்கும் (ஒரு வயதுப் பெண் குழந்தை)
மேலும் வெள்ளாங்குளம் விமானப்படை முகாமில் ஒருவருக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 03 பேருக்கும் (ஒருவர் ஒருவயது நிரம்பிய பெண் குழந்தை) தொற்று.