யாழில் மழையால் பாதிப்பு: மாநகர சபை பிரதிநிதிகள் களத்தில்!

ஆசிரியர் - Admin
யாழில் மழையால் பாதிப்பு: மாநகர சபை பிரதிநிதிகள் களத்தில்!

இன்று ஞாயிற்றுக்கிழமை(15) மதியம் யாழ்.நகரப்பகுதியில் பெய்த மழையால் வீதிகள், ஒழுங்கைகளில் தேங்கியுள்ள வெள்ளப் பாதிப்புக்களை யாழ்.மாநகரசபையின் துணைமேயர் து.ஈசன் மற்றும் , யாழ்.மாநகரசபையின் 02 ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் இதுசம்பந்தமாக உரிய தரப்புக்களினூடாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

யாழ்.நகர் மற்றும் புறநகர்ப்பகுதியில் பெய்த மழையினால் வீதிகள் ஒழுங்கைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்த முறைப்பாடுகளுக்கமையவே மேற்படி பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

யாழ்.மாநகரசபையின் 02 ஆம் வட்டாரத்துக்குட்பட்ட சீனியர் ஒழுங்கை மற்றும் கஸ்தூரியார் வீதி அரசடி வீதிச்சந்தி மற்றும் கே.கே.எஸ் வீதியில் சீனியர் வீதி உள் ஒழுங்கை ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளப் பாதிப்புக்களை யாழ்.மாநகரசபையின் 02 ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந்தினது அழைப்பின் பேரில் யாழ்.மாநகரசபையின் துணைமேயர் து.ஈசனும் இணைந்து பார்வையிட்டனர்.

பின்னர் வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதேச இளைஞர்களுடன் கலந்துரையாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவ்விடயம் சம்பந்தமாக மாநகரசபையின் பொறியியல் பிரிவுடன் கலந்துரையாடப்பட்டதன் பேரில் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு