யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..! சற்று ஆறுதலளிக்கும் வகையில் தொற்று எண்ணிக்கை குறைகிறது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களுக்கு மாவட்டச் செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..! சற்று ஆறுதலளிக்கும் வகையில் தொற்று எண்ணிக்கை குறைகிறது..

யாழ்.மாவட்டத்தில் 20 வயது தொடக்கம் 29 வயது வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் 20 வயது தொடக்கம் 29 வயதினருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் கொரோனாத் தொற்று கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் 

சற்றுத் திருப்தி அடையக் கூடிய வகையில் காணப்படுகின்ற நிலையில் தொடர்ந்தும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டும்ஆகவே தடுப்பூசி வழங்கும் காலப்பகுதிகளில் ஏற்கனவே 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான 

தடுப்பூசிகளைப் பெறாதவர்களும் குறித்த காலப்பகுதியில் தமக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு