மொட்டையான ஆயுதத்தால் தாக்கப்பட்டே இளைஞன் கொலை..! சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை, கைதான 24 வயது நபரே காரணம் என்கிறது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
மொட்டையான ஆயுதத்தால் தாக்கப்பட்டே இளைஞன் கொலை..! சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை, கைதான 24 வயது நபரே காரணம் என்கிறது பொலிஸ்..

யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் அருகில் இறந்து கிடந்தவரின் தலையில் மொட்டையான ஆயுதம் ஒன்றால் தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதாகவும் அதுவே இறப்புக்கு காரணம் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியினால் அறிக்கையிடப்பட்டிருக்கின்றது. 

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையில் உள்ள கட்டிடத் தொகுதியில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரி.வி கமரா பதிவுகளில் பொிய சுத்தலியலுடன் அப்பகுதியால் பயணித்த சந்தேகநபரே கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தரப்பில் கூறப்பட்டிருக்கின்றது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் 

நேற்று முன்தினம் மயங்கி கிடந்த நபர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்தபோது உயிரிழந்திருந்தார். சம்பவத்தில் ம.ஜெனுசன்(வயது24) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் பின்னர் பொலிஸ் நிலையம் முன்பாக கூடியிருந்த உறவினர்கள் இறுதிக் கிரியை வீட்டில் சிலருடன் நடந்த தகராறே கொலைக்கு காரணம் என கூறினர். 

இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அண்மையில் உள்ள கட்டிடம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரி.வி கமராவின் பதிவுகளை ஆராய்ந்தபோது பொிய சுத்தியலுடன் பயணித்த 24 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

சந்தேக நபர் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்றுமுன்தினம் இரவு முற்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் கட்டுக்காவலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். இந்த நிலையில் மொட்டையான ஆயுதம் ஒன்றினால் தலையில் தாக்கப்பட்டதனால் இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என்று

யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியினால் அறிக்கையிடப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். அதனால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரே இந்தக் கொலையை செய்துள்ளார் என்று சந்தர்ப்ப சூழல்நிலையின் அடிப்படையில் தம்மால் நிரூபிக்க முடியும் என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு