யாழ்.கொக்குவில் - குளப்பிட்டியில் மீன் வாங்க கூடிய மக்கள் மீது பெருமெடுப்பில் பாய்ந்த சட்டம்..! நேற்று மதுபானசாலைகள் திறக்கப்பட்டபோது உறக்கம்..
யாழ்.கொக்குவில் - குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள பகுதியில் மரக்கறி மற்றும் மீன் வாங்க சென்ற மக்களை இன்று காலை சுற்றிவளைத்து அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
கொக்குவில் சந்தை மூடப்பட்டிருப்பதால் சந்தைக்கு அருகில் உள்ள பகுதியில் மீன் விற்பனை நிலையம் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் தமக்கான உணவுகளை வாங்க சென்றுள்ளனர். இதன்போது,
நல்லூர் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாரும் இணைந்து வலுக்கட்டாயமாக உணவுப் பொருட்களை வாங்க சென்றவர்கள் மற்றும் வீதியால் சென்றவர்களையும் மறித்து அன்டியன் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.
அத்தியாவசிய பொருட்களை தாம் வாங்கச் சென்ற நிலையில் தமக்கு அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதாரத் தரப்பு மதுபான நிலையங்களில் ஆயிரக்கணக்கில் கூடி உள்ளவர்களுக்கு ஏன் அன்டியன் பரிசோதனை மேற்கொள்ள முடியவில்லை?
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாத நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு வேளையில்
மதுபான நிலையங்களுக்கு முன்னால் ஆயிரக்கணக்கானவர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது ஒன்றுகூடியது எவ்வாறு என அவர்கள் கேள்வி எழுப்பினர். குறித்த விடயம் தொடர்பில் நல்லூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரியை
தொடர்பு கொண்டு கேட்டபோது மக்களின் பாதுகாப்புக்காக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் அன்டியன் பரிசோதனை மேற்கொண்டதாகவும் தேவை ஏற்பட்டால் மதுபான நிலையங்கள் பரிசோதனையை மேற்கொள்ள தயாராக இருப்பதாகவும்
அவர் மேலும் தெரிவித்தார்.