யாழ்.மாவட்டத்தில் மதுபானசாலைகளை முற்றுகையிடும் மதுப்பிரியர்கள்! பியர் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மதுபானசாலைகளை முற்றுகையிடும் மதுப்பிரியர்கள்! பியர் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டு சில மணித்தியாலங்களில்..

மதுபானசாலைகள், விற்பனை நிலையங்களில் பியர் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாவட்டத்தில் மதுபானசாலைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். 

நாடு முழுவதும் மதுபானசாலைகள், விற்பனை நிலையங்களில் பியர் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மதுவரி திணைக்களம் அறிவித்திருக்கின்றது. 

இந்த அறிவிப்பு வெளியாகி சில மணித்தியாலங்களில் யாழ்.கோண்டாவிலில் உள்ள மதுபானசாலையில் மக்கள் வீதியை மூடி குவிந்திருந்ததை காண முடிந்தது. 

இதேபோன்ற நிலை யாழ்.மாவட்டத்தின் பல இடங்களிலும் மதுபானசாலைகளில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. Radio