யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக பொதுமக்கள் கூடியதால் பதற்றம்! சந்தேகநபர்கள் இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக பொதுமக்கள் கூடியதால் பதற்றம்! சந்தேகநபர்கள் இருவர் கைது..

யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்தவரின் விசாரணைகளை பொலிசர் உரிய முறையில் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்து 

இன்று வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். 

அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் இறந்துள்ளதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

இருப்பினும் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகள் திருப்தியில்லை என தெரிவித்து உறவினர்களும் பொதுமக்களும் வீதிக்கு குறுக்கே அமர்ந்து வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியதை தொடர்ந்து பொதுமக்களால் கொலை குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் இருவரை பொலிசார் கைது செய்ததை தொடர்ந்து போராட்டம் நிறுத்தப்பட்டது.

Radio